வாழப்பாடி ஐயப்ப தர்ம பிரசார ரதத்துக்கு வரவேற்பு
ADDED :2208 days ago
வாழப்பாடி: சபரிமலை ஐயப்பன் கோவிலிலிருந்து, ஐயப்ப ஜோதி ஏற்றப்பட்டு, இந்து தர்மம் குறித்து பிரசாரம் மேற்கொள்ள, 10க்கும் மேற்பட்ட ரதங்கள், சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றன.
கடந்த, 10ல், சேலம், செவ்வாய்ப்பேட்டையிலிருந்து தொடங்கிய, ஐயப்ப பிரசார ரத யாத்திரை, நேற்று 30ல், மதியம், வாழப்பாடிக்கு வந்தது. அக்ரஹாரம், சென்றாய பெருமாள் கோவில் வளாகம் முன், திரளான பக்தர்கள், ரதத்துக்கு வரவேற்பளித்தனர். அப்போது, அமிர்தகிருஷ்ண சுவாமிகள் முன்னிலையில், ஐயப்பனுக்கு பூஜை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.