சின்னாளபட்டியில் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்
ADDED :2210 days ago
சின்னாளபட்டி:கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் இன்று மாலை(நவ. 2ல்) சூரசம்ஹாரம் நடக்கிறது.
சின்னாளபட்டியில், நான்கு முகங்களைக் கொண்ட சதுர்முக முருகன் கோயில் உள்ளது. இங்கு கந்தசஷ்டி விழா அக். 28ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தினமும் யாகசாலை பூஜை கள், வேதிகார்ச்சனை உள்பட சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், இன்று (நவ.2) மாலை நடக்கிறது. யாகசாலை பூஜையுடன் துவங்கி, கலசாபிஷேகம், அன்னை காமாட்சியிடம் வேல் வாங்குதல், சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. நாளை(நவ. 3ல்), சிவசுப்ரமணிய சுவாமியின் திருக்கல்யாணம், தொடர்ந்து அன்ன தானம் நடக்கிறது.