உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் உண்டியலில் ‘சீல்’ இல்லாததால் சர்ச்சை

கோயில் உண்டியலில் ‘சீல்’ இல்லாததால் சர்ச்சை

பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் தற்காலிக   உண்டியலில் ’சீல்’ வைக்கததால் பக்தர்கள் சர்ச்சையை கிளப்பினர்.

பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. நேற்று 3 ல், திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். கொடி மரம் அருகே கோயில் நிர்வாகம் ’மொய்பணம்’போடுவதற்கு 4 தற்காலிக உண்டியல் வைத்திருந்தனர். இந்த உண்டியலில் ’சீல்’ வைக்கப்படவில்லை.

கோயில் தற்காலிக உண்டியல்கள் ’சீல்’ வைக்கவேண்டும். அதனை திருப்பணிக்குழுவினர் கள், பக்தர்கள் முன்னிலையில் உண்டியல் திறந்து பணம் எண்ண வேண்டும். நேற்று 3 ல், உண்டியலில் ’சீல்’   குறித்து  சமூகஆர்வலர்கள் கோயில் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டனர். முறையான பதில் இல்லை. கடந்தகாலங்களில் உண்டியலில் சீல் இல்லாததல்  முறைகேடு நடந்தது. இதுபோன்ற தவறு நடக்காமல் தடுக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேனண்டும் என பக்தர்கள் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !