உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / படுநெல்லி கிருஷ்ணருக்கு திருக்கல்யாண உற்சவம்

படுநெல்லி கிருஷ்ணருக்கு திருக்கல்யாண உற்சவம்

படுநெல்லி: காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி அருந்ததியர்பாளையம் கிராமத்தில், ராதா, ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவில் உள்ளது.நேற்று முன்தினம் (நவம்., 3ல்), 48வது நாள் மண்டல பூஜை நிறைவு தினத்தை முன்னிட்டு, இரவு, 8:00 மணிக்கு, கணபதி பூஜையுடன் விழா துவங்கியது.

முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து, கல்யாண சீர்வரிசை, மங்கள வாத்தியம் முழங்க, கிருஷ்ணர் கோவிலை வந்தடைந்தது. அங்கு, ராதா, ருக்மணிக்கு கிருஷ்ணர் தாலி கட்டினர். தொடர்ந்து, இம்மூவரும் வீதியுலா வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !