மனைவியை நேசியுங்கள்
ADDED :2206 days ago
கணவரை நச்சரிப்புடன் குறை கூறும் பெண்களைப் போல மனைவியைக் குறை கூறும் ஆண்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு அறிவுரை சொல்கிறார் நாயகம்.
”மனைவியைப் பற்றி முடிந்தளவு நல்ல எண்ணமே வைத்திருங்கள். அவளுடன் சேர்ந்து வாழ எண்ணுங்கள். ஒருவேளை அவள் சரிவர நடக்காவிட்டாலும் சகிப்புத்தன்மை மிக அவசியம். அவளது முகம், உடலமைப்பு, பழக்க வழக்கம், வீட்டைப் பேணும் முறைகளில் குறை இருந்தாலும் பெரிதுபடுத்தாதீர்கள். அவளது நல்ல குணங்களை கவனத்தில் கொள்ளுங்கள். தவறு செய்தால் பொறுத்துக் கொள்ளுங்கள். அர்ப்பணிப்பு, விவேகத்துடன் நேசத்துடன் செயல்படுங்கள்” என்கிறார்.