12நாள் சஷ்டி விழா
ADDED :2207 days ago
முருகத்தலங்களில் கந்தசஷ்டி விழா ஆறு நாள் நடக்கும். சில தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாள் நடத்துவர். ஆனால் திருச்செந்தூரில் முதல் ஆறுநாள் வரை விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாள் கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என 12 நாட்கள் சஷ்டி கொண்டாடப் படுகிறது.