தைரியம் அதிகரிக்க...!
ADDED :2208 days ago
சிவனுக்கு எல்லா நாளிலும் பூஜை நடந்தாலும், பவுர்ணமியில் நடக்கும் பூஜை சிறப்பிடம் பெறுகிறது. இந்நாளில் சந்திரன், முழு ஆற்றலுடன் பூரண சுப கிரகமாக இருப்பார். எனவே, இவ்வேளையில் சிவனை வழிபடுவது விசேஷம். நம் மனதை இயக்குபவர் என்பதால் சந்திரனுக்கு மனோகாரகன் என்று பெயர். பவுர்ணமியன்று சிவனை வழிபட தைரியம் அதிகரிக்கும்.