காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில் மகாபிரதோஷம்
ADDED :2362 days ago
கன்னிவாடி:தருமத்துப்பட்டி அருகே காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில், சனி மகா பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடந்தது. பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், பிரதோஷ சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.