திருச்செந்தூர் கோவிலில் பாட்டரி கார் வசதி!
ADDED :4927 days ago
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக, 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பாட்டரி கார் இயக்கத்தை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன், நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். இதன்மூலம், இங்கு தரிசனத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள், முதியோர் இக்காரில், கோவில் வளாகத்தை இலவசமாக சுற்றிப் பார்க்கலாம். இந்நிகழ்ச்சியில், கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் கோட்டைமணிகண்டன்,மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.