திருக்கோவிலுார் சைலோவாம் குருசேகரத்தின் 150 வது ஆண்டு விழா
ADDED :2268 days ago
திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் ஆற்காடு லுத்தரன் திருச்சபையின் சைலோவாம் குருசேகரத் தின் 150வது ஆண்டு விழா நடந்தது.
விழாவையொட்டி நகர் பகுதியில் பேராயர் சாமுவேல் கென்னடி சிற்றாலயத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து சைலோவாமில் நடந்த விழாவில் சபை போதகர் ஸ்டீபன் பிரபாகரன் வரவேற்றார். மறைதிரு கிருபா ரட்சனிய விஜயன், உதவித் தலைவர் ஹூபர்ட் தனசுந்தரம், செயலர் தெய்வநீதி, மத்திய நிர்வாகி ஜாஷவா பீட்டர் சிறப்புரையாற்றினர். 150வது ஆண்டு நினைவாக ஆலயம் விரிவாக்கம் செய்ய அடிக்கல் நாட்டப்பட்டது.நிகழ்ச்சியில் திருச்சபைத் தலைவர்கள் பேராயர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.இயேசுநேசம் பேரின்பதாஸ் நன்றி கூறினார்.