ஒளிமயமான எதிர்காலம்
UPDATED : அக் 21, 2021 | ADDED : அக் 21, 2021
குழந்தைகள் அனைவரும் தனித்திறன் படைத்தவர்கள். ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையுடன் ஒப்பிடக்கூடாது. அவர்களுக்கு அடிப்படை குணங்களை கற்றுத்தந்தால் சமுதாயத்திற்கு பயன் உள்ளவர்களாக மாறுவார்கள்.வீட்டிலிருந்து தொடங்கும் ஒழுக்கம் வெளியிலும் தொடரும். எனவே பின்வரும் விஷயங்களை கற்றுக்கொடுங்கள். * சூரியன் உதிக்கும் முன் கண் விழித்தல்* காலைக்கடனை ஒழுங்காக செய்து முடித்தல். * சரியான நேரத்திற்கு அளவாக உண்ணுதல். * ஆடையை சுத்தமாக அணிந்து கொள்ளுதல். * நேரம் தவறாமையை கடைபிடிக்க கற்றுத்தருதல். * அனைவரிடமும் விட்டுக்கொடுத்து செல்லுதல். * பெரியவர்கள், ஆசிரியர்களை மதித்தல். இவைகளை செய்தாலே போதும்.