ஆடும் பன்றியும்
UPDATED : மே 15, 2023 | ADDED : மே 15, 2023
ஒற்றையடி பாதையில் ஆட்டுக்குட்டியும் பன்றிக்குட்டியும் சென்றன. எதிரே வந்த ஓநாயை பார்த்து அருகில் இருந்த சாக்கடைக்குள் இரண்டும் விழுந்தன. சற்று நேரத்தில் ஓநாய் அங்கிருந்து நகர்ந்தது. நீண்ட நேரமாக அழுக்கில் கிடக்கிறேனே என உணர்ந்த ஆட்டுக்குட்டி, சாக்கடையிலிருந்து எழுந்து பாதையை நோக்கி பயணித்தது. ஆனால் பன்றியோ எதற்காக இப்படி கிடக்கிறோம் என்பதை சிந்திக்கவே இல்லை. இதைப் போலத் தான் சிலர் குறிக்கோள் இல்லாமல் வாழ்வைக் கழிக்கின்றனர்.