களிமண் பொம்மை
UPDATED : ஆக 13, 2024 | ADDED : ஆக 13, 2024
தன் குழந்தைகள் இருவரும் சண்டையிடுவதைக் கண்டு வருந்தினாள் ஜாய். 'சிறுவர்களான நீங்கள் சண்டையிட்டால் வருங்காலத்திலும் அது தொடரும். எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்; ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்'' என அறிவுரை சொன்னார் தந்தை ஆம்ஸ்ட்ராங். அப்போது களிமண் பொம்மைகள் விற்கும் பெண் தெருவில் சென்றாள். அவளைப் பார்த்ததும் விளையாட பொம்மை வேண்டும் என சிறுவர்கள் அழுதனர். அவர்களுக்கு வாங்கிக் கொடுத்து விட்டு மனைவியிடம், 'இந்த களிமண் பொம்மை போன்றவர்கள் குழந்தைகள். அவர்களை எப்படி நாம் வளர்க்கிறோமோ அதற்கேற்ப வாழப் பழகுவார்கள்'' என்றார் ஆம்ஸ்ட்ராங்.