புத்திசாலி
UPDATED : செப் 27, 2024 | ADDED : செப் 27, 2024
'என் அப்பா பணக்காரராக இருந்திருந்தால் எனக்கு கஷ்டம் வந்திருக்காது' எனப் புலம்பினான் ஒரு இளைஞன். இதையறிந்த அவனது தந்தையின் நண்பர் ஒருவர், பெட்டி ஒன்றை ஒப்படைத்து, 'நான் வரும் வரை திறக்காமல் வைத்திரு; சன்மானம் தருகிறேன்' என்றார். பெட்டியின் உள்ளே என்ன இருக்கும் என்ற ஆவலில் அதை இளைஞன் திறந்தான். அதிலிருந்து எலி ஒன்று ஓடியது. தந்தையின் நண்பர் பெட்டியைக் கேட்ட போது, திறந்தபடி கொடுத்தான். 'இந்த சிறிய விஷயத்திற்கே பொறுப்பின்றி நடக்கிறாயே... மற்றவரை நீ குறை சொல்லலாமா'' எனக் கேட்டார். அன்று முதல் குறை சொல்வதைக் கைவிட்டான். இருப்பதை ஏற்றுக் கொள்பவனே புத்திசாலி.