வேண்டாமே விபரீதம்
இத்தாலி ஓவியர் மார்கோ மெல்கிராட்டி ஓவியம் ஒன்றை வரைந்திருந்தார். அதன் கீழே, ' யாருடன் விளையாடுகிறீர்கள் எனத் தெரியாமலே உங்களுக்கு நீங்கள் துன்பத்தை வரவழைத்து கொள்கிறீர்கள்' என வாசகம் எழுதப்பட்டிருந்தது. ஒரு துவாரத்தின் வழியே வெளியில் தெரியும் பாம்பின் வாலை பூனை ஒன்று, எலியின் வாலாக கருதி இழுக்கும் படம் அது. அது எலியல்ல! சுவருக்கு பின்னால் இருப்பது விஷப்பாம்பு என்பது பூனைக்கு தெரியாது. தெரிந்திருந்தால் அருகில் வருமா... அது போலவே மனிதர்கள் அறியாமையில் சிக்கித் தவிக்கிறார்கள். பணத்தின் மீதுள்ள மோகம், தகுதிக்கு மீறிய ஆசை என வாழ்க்கையை போராட்டமாக்கி விடுகிறார்கள். ஒரு நிமிடம் சிந்தியுங்கள்! பாம்பின் வாலை எலி வாலாகக் கருதி விளையாடாதீர்கள். சிறியது என நினைக்கும் விஷயம் கூட உண்மையில் நம்மை விடப் பெரியது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உடல்நிலையில் கவனம் செலுத்தி ஆரோக்கியமாக வாழுங்கள். வாழ்க்கை முக்கியமானது, அதைவிட உடல்நலம் முக்கியம்.