சிரிக்க... சிந்திக்க...
பன்றியை வைத்து வித்தை காட்டி சம்பாதித்தார் மூர்அவுஷ். தலைகீழாகக் கிடக்கும் எழுத்துக்களை சரியாக எடுத்து வந்து, 'நான் ஒரு நல்ல பன்றி' எனக் காண்பிக்கும் அந்த பன்றி. பின்னங்கால்களை மட்டும் ஊன்றி நடந்து சிறுவர்களை சிரிக்க வைக்கும். கண்ணாடியை மூக்கில் மாட்டிக் கொண்டு, புத்தகம் படிப்பது போல 'போஸ்' கொடுக்கும். தன்னை வாழ வைத்த பன்றிக்கு நன்றி செலுத்தும் விதமாக சோப்பு போட்டு குளிப்பாட்டி, பவுடர், சில்க் டிரஸ் அணிவித்து பாதுகாத்தார். ஒருநாள் பன்றியுடன் அவர் தெருவில் நடந்த போது நழுவி ஓடியது. சாக்கடைக்குள் இறங்கி, ஆனந்தமாக குளித்தது. பன்றியின் இயல்பைக் கண்ட மூர்அவுஷ் வித்தை காட்டும் தொழிலையே கைவிட்டார். மனிதனும் இப்படித் தான். பல நேரங்களில் குரூரபுத்தியால் தீய செயல்களில் ஈடுபடுகிறான். எவ்வளவு படித்தாலும், நாகரீகமாக இருந்தாலும் புத்தியை கடன் கொடுத்து விடுகிறான். தீமையை போக்கும் வழியின்றி தடுமாறுகிறான்.