நட்பு
UPDATED : அக் 25, 2024 | ADDED : அக் 25, 2024
தந்தை இறந்த பின் பணம் இல்லாமல் திண்டாடினான் அபிலேக். ஒருநாள் அவனைக் கண்ட நண்பன் ஸ்டீபன், ''அன்பும், உண்மையும் கொண்ட உன்னைப் போன்ற நல்லவர்களை ஆண்டவர் கைவிடுவதில்லை'' என்று சொல்லி தன் உறவினரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். செல்வந்தரான அவர் தன் நிறுவனத்தில் அபிலேக்கை பணியாளராக சேர்த்துக் கொள்வதாக உறுதியளித்தார். நல்ல நட்பு தோற்பதில்லை.