உள்ளூர் செய்திகள்

நல்லதை கொடுப்போம்

 இரு தரப்பிடையே பகையினால் ஊரின் நடுவே தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டது. ஒருநாள் வலது பக்கத்தில் வசிப்பவர்கள் வெறுப்புடன் குப்பைகளை கொண்டு வந்து இடது பகுதியில் வீசிச் சென்றார்கள். பதிலுக்கு இடது பக்கம் வசிப்பவர்கள் நிறைய ரொட்டிகள், பழங்கள், மளிகை பொருட்களை கொண்டு வந்து வலதுபக்கம் வசிப்பவருக்காக கொட்டினர். அத்தோடு 'இருப்பதைக் கொடுப்போம் இல்லாதவருக்கே' என எழுதி துண்டு சீட்டையும் வீசினர். இதைப் பார்த்து வலது பக்கவாசிகள் மனம் திருந்தினர். நல்லதை பிறருக்கு கொடுப்போம்.