புகை... பகை...
UPDATED : ஜன 23, 2025 | ADDED : ஜன 23, 2025
கிளி ஒன்றை வளர்த்தான் டேவிட். ஒருநாள் அவனது வீட்டிற்கு சில நண்பர்கள் வந்தனர். சிகரெட் குடித்தபடி பல மணி இருந்து விட்டு சென்றனர். அந்த சில மணி நேர கெட்ட பழக்கம் டேவிட்டை மறுநாள் தொற்றிக் கொண்டது. இதனால் கிளியோ இருமிக் கொண்டே இருந்தது. மருத்துவரிடம் காண்பித்த போது அதற்கு பிரச்னை இல்லை எனத் தெரிவித்தார். வீட்டிற்கு வந்தவுடன் வழக்கம் போல் சிகரெட்டை பற்ற வைத்தான் டேவிட். உடனே இருமியது கிளி. இதை பார்த்த டேவிட்டிற்கு புத்தி வந்தது. இனி புகைப்பதில்லை என முடிவெடுத்தான். புகை நமக்கு பகை என்பதை உணர்த்திய கிளியை உயிராக மதித்தான்.