நம்பிக்கை
UPDATED : ஜன 30, 2025 | ADDED : ஜன 30, 2025
இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜ் முல்லர் இளமை காலத்தில் நோய்வாய்ப்பட்டார். நோய் முற்றிய நிலையில் அவர் பிழைக்க மாட்டார் என குடும்பத்தினர் நினைத்தனர். ஆனால் அவர் நம்பிக்கை இழக்கவில்லை. ஆண்டவர் அருளால் உயிர் பிழைத்தார். நீண்ட காலம் வாழ்ந்ததோடு பல குழந்தைகளுக்கு கல்வி அளித்தார். அவர்களின் முன்னேற்றத்திற்கும் உதவினார். இதற்காக யாரிடமும் அவர் பணம் கேட்டதில்லை. இவரின் சேவையைக் கண்டு பலரும் நன்கொடை கொடுத்தனர். நம்பிக்கையே நன்மை தரும்.