ஈடுபாட்டுடன் வேலை செய்
UPDATED : ஜன 30, 2025 | ADDED : ஜன 30, 2025
ரஷ்ய அறிஞர் டால்ஸ்டாயிடம் ' மனித சமுதாயத்திற்கு தங்களின் அறிவுரை என்ன'' எனக் கேட்டார் நிருபர்.சிறிய உயிரினமான எறும்பு உழைக்கத் தயங்குவதில்லை. தன் எடையைப் போல 6 மடங்கு சுமையைத் துாக்கிச் செல்லும். சில நேரங்களில் 12 மடங்கு எடையாக கூட இருப்பதுண்டு. அப்படியானால் சிந்திக்கும் ஆற்றல் பெற்ற நாம் எப்படி உழைக்க வேண்டும் என்பதை யோசித்து பாருங்கள். எந்த வேலையையும் ஈடுபாட்டுடன் செய்தால் அது சுமையாகத் தெரியாது. சுகமாகி விடும்'' என்றார்.