உள்ளூர் செய்திகள்

ஆர்வம்

ஒருமுறை ஆன்மிக பேச்சாளர் ஒருவர் வரவிருப்பதாக சர்ச்சில் அறிவிப்பு வைக்கப்பட்டது. நிகழ்ச்சியன்று மக்கள் காத்திருந்தனர். ஆனால் உடல்நலக் குறைவால் பேச்சாளர் வரவில்லை என்றும், நாளை நிகழ்ச்சி நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மறுநாள் கூட்டம் பாதியாக குறைந்தது. அப்போதும் பேச்சாளருக்கு உடல்நிலை சரியில்லை; நாளை நிகழ்ச்சி நடக்கும் என தெரிவித்தனர். மூன்றாம் நாளன்று சிலரே இருந்தனர். அவர்களின் முன் பேசத் தொடங்கிய பேச்சாளர், 'உங்களில் எத்தனை பேருக்கு ஆண்டவரைப் பற்றி கேட்பதில் ஆர்வம் இருக்கிறது' என அறிவதற்காக தாமதப்படுத்தினேன்'' என்றார்.