ஆண்டவரின் துாதர்
UPDATED : மார் 07, 2025 | ADDED : மார் 07, 2025
மக்களுக்கு சேவை செய்வதற்கு வயதும், குடும்பமும் தடை அல்ல என நிரூபித்தவர் கால்வின். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர் எட்டு வயதில் இருந்தே ஆன்மிக சேவைகளில் ஈடுபட்டார். மக்கள் செல்வாக்கு மிக்க இவர் 'ஆண்டவரின் துாதர்' என போற்றப்பட்டார். தனிமனித ஒழுக்கம், ஆண்டவரின் மகத்துவம், நல்ல பழக்க வழக்கங்கள், நல்ல அரசாங்கம் பற்றியதாக இவரது போதனைகள் இருந்தன. 'உலகில் பிறக்கும் மனிதர்களில் யார் மீட்பு பெறுவர், யார் அழிவுக்கு ஆளாவர் என்பது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட செயல்' என அடிக்கடி இவர் குறிப்பிடுவார். மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தியின் ஆற்றல் அளப்பரியது என திட்டவட்டமாக நம்பினார். என் கருத்துக்கள் அனைத்தும் புனித அகுஸ்தீன் வழிகாட்டுதலை பின்பற்றியதாகும் என நன்றி உணர்வுடன் செயல்பட்டார். கடமையில் கவனம் வை; உலகம் உன்னை கொண்டாடும்.