இழந்த சொர்க்கம்
'என் வேலைக்காரன் கூட எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறான்... ஆனால் என் மனதில் நிம்மதி இல்லையே' என வருந்தினார் மன்னர். இது பற்றி சொன்ன போது, 'மன்னா... நாளை முதல் வேலைக்காரன் எப்படி செயல்படுகிறான் என்பதை கண்காணிக்கத் தொடங்குங்கள். இப்போதே அதற்கான வேலையில் நான் ஈடுபடுகிறேன்' என்றார் அமைச்சர். பணி முடிந்ததும் அரண்மனையில் இருந்து வீட்டுக்குச் சென்றான் வேலைக்காரன். அப்போது அவனது வீட்டு வாசலில் பொற்காசுகள் அடங்கிய பை ஒன்று கிடந்தது. அதைக் கண்டு மகிழ்ந்த அவன் மனைவியிடம் அதை ஒப்படைத்தான். அதில் 99 காசுகள் இருப்பதை அறிந்த அவள், 'இதிலுள்ளஒரு காசு மட்டும் எப்படியோ தொலைந்துவிட்டது. அதை முதலில் தேடுங்கள்' என நச்சரித்தாள். இழந்த சொர்க்கம் போல இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டதால் அவனது நிம்மதி தொலைந்தது. வேலைக்காரனிடம் நடந்த உண்மையை தெரிவித்தார் அமைச்சர். இல்லாததை நினைத்து ஏங்கினால் நிம்மதி காணாமல் போகும்.