மணமகன் தயார்
UPDATED : ஏப் 24, 2025 | ADDED : ஏப் 24, 2025
கணவரால் கைவிடப்பட்ட பெண் மோனிகா. அவளுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் ராபர்ட். அவனோ தந்தையைப் போல பொறுப்பற்றவனாக இருந்தான். திருமணம் செய்து வைத்தால் திருந்துவான் எனக் கருதி ஏற்பாடு செய்தாள். 'அன்பு மகனே! விரைவில் குடும்பஸ்தனாகப் போகிறாய். உன் தந்தை கைவிட்டதைப் போல மனைவியிடம் பொறுப்பின்றி நடக்காதே. அதைக் கேட்டதும் குற்றவுணர்வு மனதை உறுத்தியது. வளர்த்து ஆளாக்கிய தாய்க்கு இதுநாள் வரை என்ன செய்தோம் என சிந்தித்தான். கண்களில் கண்ணீர் பெருகியது. திருந்திய ராபர்ட் திருமணத்திற்கு தயாரானான்.