உள்ளூர் செய்திகள்

இரக்கம் வேண்டும்

அடர்ந்த காடு அது. அங்கு வழிப்போக்கன் ஒருவனை துன்புறுத்தி பணம், பொருட்களை திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். அந்த வழியாக வந்த போதகர் ஒருவரும், பணக்காரர் ஒருவரும் அதை பார்த்தும் பார்க்காதது போலச் சென்றனர். ஆனால் கழுதையுடன் வந்த ஏழை ஒருவர், மயங்கிக் கிடந்த வழிபோக்கர் மீது இரக்கப்பட்டார். அவருக்கு தண்ணீர் கொடுத்ததோடு கழுதை மீது ஏற்றிச் சென்று தர்ம சத்திரத்தில் தங்க வைத்தார். மற்றவரின் துன்பம் கண்டு இரக்கப்படாதவர் நீதிமான் அல்ல. பிறருக்கு உதவி செய்வதில் இந்த ஏழையைப் போல இரு என சீடர்களுக்கு அறிவுறுத்தினார் ஆண்டவர்.