மரியாதை
UPDATED : மே 15, 2025 | ADDED : மே 15, 2025
அதிகாரி ஒருவர் எப்போதும் தலைக்கனத்துடன் செயல்படுவார். மனிதநேயம் அற்றவராக இருந்தார். ஒருநாள் அலுவலகத்தின் பின்புறத்தில் இருந்த பாழுங்கிணற்றில் தவறுதலாக விழுந்து விட்டார். அவரைக் காப்பாற்ற ஊழியர்கள் பலவழிகளில் முயற்சி செய்தனர். ஒருவர் கயிறு விட்டு இழுக்கலாம் என்றார். மற்றொருவர் ஏணியை கொண்டு வர ஓடினார்.இன்னொருவர் தீயணைப்பு வீரர்களை வரவழைக்கலாம் என்றார். அப்போது அங்கு ஒருவர், 'தலைமை அலுவலகத்தில் இருந்து நம் அலுவலகத்திற்கு மேலதிகாரி திடீர் விசிட் செய்துள்ளார்' எனக் கத்தினார். அவ்வளவு தான் அனைவரும் அலுவலகத்திற்குள் ஓடினர். வகிக்கும் பதவிக்கு தான் மரியாதை என்பதை உணர்ந்தார் அதிகாரி.