என்னை விட்டுவிடு
UPDATED : மே 15, 2025 | ADDED : மே 15, 2025
முதியவர் ஒருவரிடம், 'நான் திருந்துவதற்கு வழி சொல்லுங்கள்' எனக் கேட்டான் ஒரு குடிகாரன். 'நாளை மாலையில் வா சொல்கிறேன்' என்றார். மறுநாள் அவரைத் தேடிச் சென்ற போது ஒரு துாணைக் கட்டிப் பிடித்தபடி நின்றிருந்தார். குடிகாரனைக் கண்டதும், 'என்னை விட்டுவிடு, என்னை விட்டுவிடு' எனக் கத்தினார் முதியவர். 'நீங்கள் தானே துாணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?' எனக் கேட்டான் குடிகாரன். அவரும் சிரித்துக் கொண்டே, 'இந்த துாணை நான் பிடித்திருப்பது போலத்தான் குடிப்பழக்கத்தை நீ வைத்திருக்கிறாய். நீ விட்டால் இந்த பழக்கம் மறைந்து விடும்' என்றார் முதியவர்.