வெற்றியாளர்
UPDATED : ஜூன் 05, 2025 | ADDED : ஜூன் 05, 2025
அமெரிக்காவை சேர்ந்தவர் வால்ட் டிஸ்னி. இவர் தன் பதினேழாம் வயதில் இரண்டாம் உலகப்போரில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றினார். அதன் பிறகு தனக்கு கிடைத்த சிறுசிறு வேலைகளையும் செய்து வந்தார். இருந்தாலும் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வம் மனதில் கனன்று கொண்டிருந்தது. ஓவிய பள்ளியில் சேர்ந்து கேலிச்சித்திரம் (கார்ட்டூன்) வரையக் கற்றுக் கொண்டார். விளம்பரக் கூடம் ஒன்றில் கண்ணாடி ஓவியங்கள் வரைந்து வந்தார். இந்த அனுபவத்தின் வாயிலாக ஹாலிவுட்டில் திரைப்படக் கம்பெனி ஒன்றை தொடங்கி வெற்றியாளராக உருவெடுத்தார். எண்பதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றார். படிப்படியான வளர்ச்சி நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை டிஸ்னி நிரூபித்தார்.