உள்ளூர் செய்திகள்

நலமுடன் வாழ்வீர்கள்

பெரியவர் ஒருவர் சாலை ஓரத்தில் மரம் நடுவதற்கு குழி தோண்டிக் கொண்டிருந்தார். அவ்வழியாக சென்ற இளைஞன் ஒருவன், ''என்ன ஐயா... உமக்கு நீரே குழி தோண்டுகிறீரா...'' எனக் கேலி செய்தான். ஆனால் பதில் சொல்லவில்லை. அவரின் அமைதியான முகத்தைக் கண்டான் இளைஞன். ''அந்தக் காலத்தில் எங்க தாத்தா வைத்த மரங்களால் இந்த ஊரே பசுமையாக இருக்கு. அதனால நானும் முதுமையிலும் மரம் நடும் பணியைச் செய்கிறேன். அப்போது தான் எதிர்காலத்தில் நீங்கள் நலமுடன் வாழ்வீர்கள்'' என்றார். தவறை உணர்ந்த இளைஞன் வெட்கப்பட்டான். நல்ல குணம் எல்லோரிடமும் உள்ளது. அதை வெளிக்கொண்டு வருவதில் தான் வெற்றி இருக்கிறது. வாக்குவாதம் செய்தால் முடிவு என்னாகும்... பகை தான் மிஞ்சும். அமைதியும், பொறுமையும் எதிரியைக் கூட திருத்தி விடும்.