உள்ளூர் செய்திகள்

இரக்கம்

பழத்தோட்டம் ஒன்றை பராமரித்து வந்தார் வில்சன். வெயிலில் அலைந்த ஏழைச் சிறுவன் ஒருவன் வேலியின் மீதேறி பழங்களை திருடிக் கொண்டிருந்தான். கையும் களவுமாக சிறுவனை பிடித்தார் வில்சன். தண்டனை கிடைக்குமே என பயத்தில் அழுதான். ஆனால் வில்சன் அவன் மீது இரக்கப்பட்டார். ''தம்பி உனக்கு பசிக்கிறதா...'' எனக் கேட்டார். சாப்பிடுவதற்கு பிஸ்கட், பழங்கள் கொடுத்தார். எப்போது வேண்டுமானாலும் உனக்கு தேவையான பழங்களை என்னிடம் பெற்றுக் கொள்ளலாம்'' என அனுப்பி வைத்தார். இரக்கம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்.