உள்ளூர் செய்திகள்

மாத்தி யோசி

பரபரப்பான தெரு வழியே நடந்தார் ஆசிரியரான ஜேம்ஸ். ஓரிடத்தில் 'பார்வையற்ற எனக்கு உதவுங்கள்' என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. அதனருகே இருந்த தட்டில் சில்லரை நாணயங்கள் சில கிடந்தன. அவருக்கு உதவி செய்ய நினைத்த ஆசிரியர், வாசகத்தை அழித்து விட்டு வேறொன்றை எழுதிவைத்துவிட்டு நடந்தார். மீண்டும் மாலையில் அந்த தெரு வழியாக வந்த போது, தட்டில் காசுடன் பணமும் நிறைய இருந்தது. அப்படி அங்கு வருவோர் போவோரைக் கவரும் விதத்தில் என்ன எழுதினார் தெரியுமா... 'இனிய இந்த வசந்த காலத்தில் எங்கும் மலர்கள் பூத்துக் குலுங்குவதை நீங்கள் ரசிப்பீர்கள். ஆனால்.... என்னால் அதை பார்க்க முடியாதே' என எழுதினார். மாத்தி யோசியுங்கள். நல்ல மாற்றம் ஏற்படுவதை உணர்வீர்கள்.