தடைகளைத் தாண்டு
UPDATED : ஆக 20, 2025 | ADDED : ஆக 20, 2025
பேச்சாளர் ஒருவர் மேடையில் பேசினார். பார்வையாளர்களை கவரும் விதமாக ஒரு பையைக் காட்டி இதில் இருப்பது என்ன எனக் கேட்டார். பைக்குள் துணி இருப்பது தெரியவே சட்டை, பேண்ட், சேலை, போர்வை, கர்சீப் என ஆளாளுக்கு ஒரு பதிலைக் கூறினர். பேச்சாளர் அதில் இருந்த சட்டையை வெளியே எடுத்து, 'இது யாருக்கு வேண்டும்' எனக் கேட்டார். அனைவரும் கையைத் துாக்கினர். ஆனால் யாரும் இடத்தை விட்டு நகரவில்லை. அப்போது இளைஞன் ஒருவன் மேடைக்கு வேகமாக வந்து, 'ஐயா...எனக்கு தாருங்கள்' என கையை நீட்டினான். அவரும் கொடுத்தார். ''நீங்கள் ஆசைப்பட்டீர்கள். ஆனால் யாரும் என்னை நோக்கி வரவில்லை. கடைசி வரிசையில் இருந்த இவரோ உடனே வந்து வாங்கிக் கொண்டார்'' என்றார் பேச்சாளர். இலக்கை அடைய தடைகளைத் தாண்டுங்கள்.