உள்ளூர் செய்திகள்

நாட்டுப்பற்று

சிசிலி தீவை சேர்ந்தவர் விஞ்ஞானி ஆர்கிமிடிஸ். அவருக்கு அரசவையில் இடம் கொடுத்தார் தீவின் மன்னர். ஒருமுறை எதிரி நாட்டின் மன்னர் மார்சேல்ஸ் படையெடுத்தார். அந்த படையை தன் நாட்டு எல்லையிலேயே நிறுத்துவதற்காக ஆர்கிமிடிஸ் உடனடியாக அங்கு சென்றார். கடைசி வரை எதிரியால் தீவுக்குள் வர முடியவில்லை. தீவின் தலைநகருக்கு திரும்பிய விஞ்ஞானி ஆர்கிமிடிைஸ சந்திக்க விரும்பி வீரனை துாது அனுப்பினார் எதிரி மன்னர். ஆனால் நாட்டுப்பற்று கொண்ட ஆர்கிமிடிஸ் சந்திக்க மறுத்ததால் கோபமுற்ற வீரன் வாளால் குத்திக் கொன்றான். 'விஞ்ஞானியை நேரில் சந்தித்து பேச ஆசைப்பட்டேன். ஆனால் தீராத பழிக்கு ஆளாக்கி விட்டாயே' என வீரனிடம் வருந்தினார் மார்சேல்ஸ். மேலும் விஞ்ஞானியின் குடும்பத்திற்கு பணஉதவி செய்தார். நாட்டுப்பற்றால் இன்றும் மக்களின் மனதில் வாழ்கிறார் ஆர்கிமிடிஸ்.