பார்வை ஒன்றே போதும்
UPDATED : அக் 23, 2025 | ADDED : அக் 23, 2025
தேவ ஊழியரான ஜார்ஜ் ஜில்லக் ஆப்பிரிக்காவில் தங்கிய காலத்தில் வறுமை, நோயால் வாடும் மக்களைக் கண்டு வருந்தினார். அவர்கள் நலமுடன் வாழ வேண்டும் என தினமும் பிரார்த்தனை செய்தார். இதை நிரூபிக்கும் விதமாக ஒரு நாள் ஜார்ஜின் அண்டை வீட்டுக்காரர், ' ஆண்டவரின் விசுவாசியான நீங்கள், காய்ச்சலால் சிரமப்படும் என் மகள் குணம் பெற பிரார்த்தியுங்கள்' என வேண்டுகோள் விடுத்தார். 'இதோ... வருகிறேன்' என ஓடி வந்த ஜார்ஜ் அந்த குழந்தையை அன்பு பொங்க பார்த்தார். சற்று நேரத்திற்குள் காய்ச்சல் குறைவதை அறிந்து மகிழ்ந்தார். நல்லவர் பார்வை நன்மை செய்யும் என்பது உண்மை தானே!.