அவரவர் விருப்பம் போல
UPDATED : ஜூலை 31, 2023 | ADDED : ஜூலை 31, 2023
தன் வீட்டை கட்டிக்கொண்டிருக்கும் பணியாளர்களை கவனித்தார் உரிமையாளர். அதில் ஒருவர் சோகமாகவும், மற்றொருவர் மகிழ்ச்சியாகவும் இருப்பதை கண்டார். அதற்கான காரணத்தை அறிய விரும்பினார். முதலாமானவரிடம் காரணம் கேட்ட போது அதற்கு அவர் செங்கலை அடுக்கி கொண்டுள்ளேன் என்றார். மற்றொருவரோ ஆலயம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். எந்த செயலாயினும் அவரவரின் மனதைப் பொறுத்து தான் எல்லாமே என்பதை தெரிந்து கொண்டார் உரிமையாளர்.