எதையும் சமாளிக்கலாம்
UPDATED : ஏப் 09, 2023 | ADDED : ஏப் 09, 2023
டாக்டருக்கு போன் செய்த அறிஞர் பெர்னாட்ஷா, ''என்னால் நிற்கவோ, நடக்கவோ முடியவில்லை. ஒரு டீ கூட போட்டுக்குடிக்க முடியவில்லை. உடனே என்னை வந்து பாருங்கள் என சொன்னார். வீட்டின் மாடிப்படி ஏறி வந்த டாக்டர் மிகவும் சோர்வாக அவர் முன் அமர்ந்தார். இதனை கண்ட அறிஞரோ, உடனே டீ கலந்து அவரிடம் கொடுத்தார். அறிஞரிடம் பில்லை நீட்டினார் டாக்டர். எனக்கு மருத்துவம் பார்க்க வில்லையே. பிறகு எதற்கு பில் எனக் கேட்டார் பெர்னாட்ஷா. அதற்கு, ''பிரச்னை என நினைக்கும் விஷயம் அதைவிட மற்றொன்றை பார்த்தவுடன் அவை சாதாரணமாகி விடும். இதை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை'' என சொன்னார் டாக்டர்.