உள்ளூர் செய்திகள்

தீய எண்ணங்களை மனதில் சுமக்காதீர்

மாதந்தோறும் வீட்டை மாற்றிக் கொண்டிருந்தார் ஒருவர். அவருடைய நண்பரோ ஏன் இப்படி செய்கிறாய் எனக் கேட்க அதற்கு அவர் ''எல்லா வீட்டிலும் மூட்டைப்பூச்சி தொல்லை'' என சொன்னார். எந்த வீட்டிலும் மூட்டை பூச்சி தொல்லை கிடையாது. ஏன் என்றால் நானும் அந்த வீடுகளில் குடியிருந்துள்ளேன். நீ கொண்டு செல்லும் பொருட்களில் இருந்து தான் மூட்டை பூச்சிகள் பெருகியிருக்கும். சரி செய்ய வேண்டுவது வீட்டை அல்ல. உன்னையும் உன்னிடமுள்ள பொருட்களையும் தான் என்றார் நண்பர்.தீய எண்ணங்களை மனதில் சுமக்காதீர்கள். அவை எங்கு சென்றாலும் தொடரும்.