உள்ளூர் செய்திகள்

பாவத்தை செய்யாதீர்

ஜான் என்ற சிறுவன் யானைக்கு தேங்காய் கொடுத்தான். ஆசையுடன் வாங்கி, அதை உடைத்தபோது அதனுள் சுண்ணாம்பு இருப்பதை யானை அறிந்து கொண்டது. துதிக்கையில் சுண்ணாம்பு பட்டதால் புண் ஏற்பட்டது. இதைப்பார்த்த குறும்புக்கார ஜான் சிரித்தபடியே ஓடிவிட்டான். சில ஆண்டு கடந்தன. ஒருநாள் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தான் ஜான். அப்போது அங்கு வந்த யானை, அவனை அடையாளம் கண்டு துரத்தியது. யானை அதிக ஞாபக சக்தி கொண்ட விலங்கு என்பது பாவம் அவனுக்கு தெரியவில்லை. இப்படி பாவச்செயல்களை செய்பவர்கள், நிச்சயம் அதற்குரிய தண்டனையை பெறுவர். இவர்கள் தங்களின் தீய குணங்களை விடுத்து, மன்னிப்பு கேட்டால் நிம்மதியுடன் வாழலாம்.