உள்ளூர் செய்திகள்

வேண்டாமே பணத்தாசை

மன்னர் ஒருவர் தன்னை புகழ்ந்து பாடல்களை பாட வைப்பது வழக்கம். ஒரு நாள் அரண்மனைக்கு இரு கவிஞர்கள் வந்தனர். ஒருவரிடம் உமது ஊர் எங்குள்ளது என கேட்டார் மன்னர். இங்கிருந்து நுாறு மைல் தள்ளி உள்ளது என்றார். அப்படியானால் நுாறு பொற்காசுகள் கூடுதலாக பெற்றுக்கொள்ளும் என்றார் மன்னர். பேராசைக்காரரான மற்றொரு கவிஞர் இருநுாறு மைல் தொலைவில் இருந்து வருவதாக சொன்னார். அவரின் கபடத்தை தெரிந்து கொண்ட மன்னர் இரண்டு பொற்காசுகளை வழங்கினார். அடுத்தவர்களை பார்த்து பேராசை கொள்ளாதீர் என்கிறது பைபிள்.