வேண்டாமே பொறாமை
UPDATED : அக் 10, 2021 | ADDED : அக் 10, 2021
ஒருவரை வீழ்த்தும் குணங்களில் முதன்மையானது 'பொறாமை'. வாழ்க்கையில் முன்னேற விரும்புபவர்கள் இதை மனதில் நுழையவே விடக்கூடாது. சரி இந்த குணம் ஒருவருக்கு எப்படி தோன்றுகிறது என பலருக்கும் தெரியாமல் இருக்கும். அதற்கு காரணம் ஒருவரது இயலாமைதான். எப்படி என்று கேட்கிறீர்களா... ஒருவருக்கு வீடு வாங்கும் வாய்ப்பு இல்லை என வைத்துக்கொள்வோம். அவர் சொந்தவீடு வைத்திருப்பவரை பார்த்து பொறாமைபடுவார். இதுபோன்று தன்னால் முடியாததை பிறர் செய்தால் அதனால் இந்த குணம் தோன்றுகிறது. இதனால் நமது மனம் பாதிக்கிறது. எனவே பொறாமையும் வேண்டாம். இயலாமையும் வேண்டாம். உங்களிடம் என்ன உள்ளதோ அதை வைத்து திருப்தியாக வாழுங்கள். நிச்சயம் ஒருநாள் உங்களுக்கு பிடித்தமான வாழ்க்கையை வாழலாம்.