உள்ளூர் செய்திகள்

தற்பெருமை பேசாதீர்கள்

மூன்று எறும்புகள் சென்று கொண்டிருந்தபோது, எதிரே ஒரு யானை வந்தது. யானையின் உருவத்தை கண்டு பயப்படாமல் நாம் இதை கொன்று விடுவோமா என்றது முதல் எறும்பு.இரண்டாவது எறும்போ, நான் அறைந்தால் அதனால் எழுந்திருக்கவே முடியாது என்றது. இப்படி செய்வது நியாயம் இல்லை என்றது மூன்றாவது எறும்பு. பார்த்தீர்களா. எறும்பு அறைந்து யானை சாகுமா. அதன் மூச்சுக்காற்று பட்டாலே தாங்காத இவர்களோ தங்களை பலசாலிகளாக கருதுகின்றனர். உங்களை விட உயர்ந்தவர் உலகில் உண்டு என்பதை நினையுங்கள். என்னை மிஞ்ச இந்த உலகத்தில் யாரும் இல்லை என தற்பெருமை பேசாதீர்கள்.