உன் பலத்தை யாருக்காகவும் இழக்காதே...
UPDATED : ஏப் 09, 2023 | ADDED : ஏப் 09, 2023
ஒரு காட்டு இலாகா அதிகாரிக்கு அழகான ஒரு மகள் இருந்தாள். அவள் பட்டாம்பூச்சி ஒன்றை துரத்திக்கொண்டே காட்டிற்குள் சென்றாள். அங்கு கூரிய நகங்களும் கோரப்பற்களையுடைய ஒருவர் அவளை பார்த்து காதல் கொண்டார். அவளுடைய தந்தையிடம் சென்று பெண் கேட்டார். உன்னுடைய பற்களையும் நகங்களையும் எடுத்துவிட்டு வா. என் பெண்ணை தருகிறேன் என சொன்னார். அவரும் அவ்வாறே செய்தார். ஆனாலும் பெண்ணை தரமாட்டேன் என சொல்லி அடித்து விரட்டினார். யாருக்காகவும் உன் பலத்தை இழக்காதே என்கிறது பைபிள்.