சிலரிடம் வாய் பேசாதே
UPDATED : ஏப் 06, 2023 | ADDED : ஏப் 06, 2023
குஞ்சுகளுடன் கூட்டில் வசித்து வந்தது குருவி. ஒரு நாள் மழை பெய்ய அவசர அவசரமாக தன் கூட்டிற்கு வந்த குருவி எதிர் கிளையில் நனைந்தவாறு அமர்ந்திருந்த குரங்கினை பார்த்தது. அதனிடம் என்னை போல ஒரு கூட்டினை கட்டியிருந்தால் இப்போது நனையாமல் இருக்கலாமே என சொன்னது. அதைக்கேட்டு கோபம் கொண்ட குரங்கு நேராக வந்து குருவியின் கூட்டினை கலைத்தது. அறிவுரை யாருக்கு சொல்ல வேண்டும், சொல்லக்கூடாது என்பதை தெரிந்து கொண்ட குருவி வேறு இடத்திற்கு குஞ்சுகளுடன் பறந்தது. அறிவற்றவர்கள் காதில் விழும்படி எதையும் பேசாதீர் என்கிறது பைபிள்.