உள்ளூர் செய்திகள்

டிரைவரின் சாமர்த்தியம்

ஒருமுறை அறிஞர் ஐன்ஸ்டீன் சொற்பொழிவுக்கு செல்ல வேண்டியிருந்தது. அங்கு அவரை யாரும் அதுவரை பார்த்தது கிடையாது. உடல்நலக்குறைவாக ஐன்ஸ்டீன் இருந்ததால் அவரது டிரைவர், 'ஐயா... நிகழ்ச்சியை ரத்து செய்து விடலாமா' எனக் கேட்டார். 'நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை ஏமாற்ற விரும்பவில்லை' என்றார் அவர். 'அப்படியானால் ஒன்று சொல்லட்டுமா' என்ற டிரைவர், 'தங்களின் சொற்பொழிவை பலமுறை கேட்டிருக்கிறேன். நானே உங்களுக்காக மேடையில் பேசுகிறேன். நீங்கள் டிரைவராக என்னுடன் வாருங்கள்' என்றார். இந்த யோசனை அவருக்கு பிடித்திருந்தது. அதன்படியே சொற்பொழிவில் பங்கேற்றனர். முடிவில் பேராசிரியர் ஒருவர் பல சந்தேகங்களை அடுக்க டிரைவரோ, 'உங்கள் கேள்விகளுக்கு அங்கே தொப்பியுடன் அமர்ந்திருக்கும் என் டிரைவர் பதிலளிப்பார்' என்றாரே பார்க்கலாம். அவரின் சாமர்த்தியத்தை நினைத்து உற்சாகத்துடன் விளக்கம் அளித்தார் ஐன்ஸ்டீன்.