உள்ளூர் செய்திகள்

நிறைவான வாழ்க்கை

எடிசனுக்குக் காது கேட்காது. ஆனால் அவர் காதில் கோளாறு இல்லை; மனதிலேயே கோளாறு என நினைத்த நண்பர்கள் அவருக்காக டாக்டரை அழைத்து வந்தனர். நீங்கள் ஒப்புக் கொண்டால் சிகிச்சை செய்கிறோம் என்றனர்.அவர்களிடம் எடிஸன் சொன்னார் “இதோ பாருங்கள்; உங்கள் சிகிச்சை கட்டாயம் வெற்றி பெறும்; எனக்கு சந்தேகம் இல்லை. காது சரிவர கேட்காததால் நான் எதை கேட்க வேண்டுமோ அதை மட்டுமே கேட்கிறேன். அப்படி இருந்து விட்டு போகிறேன். என் மீதுள்ள அக்கறைக்கு நன்றி''என்றார் எடிசன். பிறருக்காக வாழாமல் தனக்காக வாழும் வாழ்க்கை நிறைவு தரும் என்கிறது பைபிள்.