உள்ளூர் செய்திகள்

அழைத்தால் வருவார்

வெளிநாட்டு பயணி ஒருவர் சீனா சென்றிருந்தார். அது ஒரு திருவிழாக் காலம். கோயில் ஒன்றில் மக்கள் ஏராளமாகக் கூடியிருந்தார்கள். பயணி அங்கு ஒரு விநோதமான நிகழ்வைக் கண்டார். பக்தர்கள், தங்கள் வேண்டுதலை ஒரு காகிதத்தில் எழுதி வைத்திருந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் விண்ணப்பத்தை ஒரு களிமண் உருண்டையில் சுற்றி, அங்கிருந்த விக்ரகத்தின் மீது எறிந்தனர். சில விண்ணப்பங்கள் களிமண்ணோடு விக்ரகத்தின் மீது ஒட்டிக் கொண்டன. சில கீழே விழுந்தன. சிலையில் ஒட்டிக்கொள்ளும் விண்ணப்பங்கள் மட்டும் தான் அந்தக் கடவுளால் ஏற்கப்படும், மற்றவை ஏற்கப்படாது என்ற அவர்களின் நம்பிக்கையை பயணி தெரிந்து கொண்டார். இப்படி அறியாமையில் பல மக்கள் இன்றும் உள்ளனர்.நம்முடைய ஆண்டவர் ஜெபத்தைக் குறித்து நிச்சயமற்ற தன்மையைத் தராமல், அவரது வார்த்தையைக் கொண்டு நிச்சயத்தை தந்திருக்கிறார். நம்முடைய விண்ணப்பத்தைச் சொல்ல எங்கும் அலைந்து திரிய வேண்டியதில்லை. ''என்னை நோக்கி கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்'' (எரே33.3) என்று வாக்களித்து நம்மை அழைத்துச் சொல்லியுள்ளார். அழைப்புக்குச் செவி கொடுத்தால் நமக்கும் பெரிய காரியங்களைச் செய்வார். தேவனுடைய செல்வக்களஞ்சியத்தின் வாசலைத் திறக்கும் திறவுகோலே ஜெபம்.தேவனுடைய வார்த்தை இதழிலிருந்து....