உள்ளூர் செய்திகள்

நம்பிக்கை வீண் போகாது

ஸ்காட்லாந்தில் வசித்த ஒரு பெண் தங்கள் ஊரில் ஒரு அனாதை விடுதி வேண்டும் என கேட்டு கவர்னரிடம் ஒரு விண்ணப்பம் கொடுத்தார். இதற்காக பாறைகள் நிறைந்த ஒரு நிலத்தை அரசு தந்தது. இதை உடைத்து கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் ஏற்படும் செலவை எண்ணிப்பார்த்தார். மலைப்பாக இருந்தது. சில நாட்களுக்கு பிறகு காண்ட்ராக்டர் ஒருவர், ''எனக்கு நிறைய கற்கள் தேவை. உங்கள் நிலத்தில் உள்ள பாறைகளை உடைத்துக் கொள்ள அனுமதி தாருங்கள். பணம் தருகிறேன்'' என்றார். இதைக்கேட்டு அந்தப்பெண் ஆனந்தக்கண்ணீர் வடித்தார். பின்னர் விடுதியையும் கட்டினார். நமது நம்பிக்கை எப்போதும் வீண்போகாது.