ஆசிரியர் நினைத்தால்...
UPDATED : ஜூன் 02, 2023 | ADDED : ஜூன் 02, 2023
எத்தனை முறை சொல்லிக் கொடுத்தாலும் படிப்பில் ஆர்வம் இல்லாத மாணவனை அழைத்தார் ஆசிரியர். அவனிடம் பின்புறம் உள்ள கிணற்றில் தண்ணீர் இறைத்து அனைவருக்கும் கொடு என்றார். அக்கிணறு பாறாங்கல்லால் கட்டப்பட்டது. அக்கல்லில் தண்ணீர் இறைக்கும் கயிறானது கல்லில் பட்டு அது பிய்ந்து இருந்தது. அதை பார்த்த அவனுக்கு ஆச்சரியம். இந்த பாறாங்கல்லை விடவா மோசமாக இருக்கிறேன் என சிந்தித்தான். மீண்டும் ஆசிரியரிடம் சென்ற அவன், இந்த ஒருமுறை படிக்க வாய்ப்பு கொடுங்கள் என கேட்டான். அவனுக்கு புத்தி வந்ததை நினைத்து பெருமைப்பட்டார் ஆசிரியர்.