புத்திசாலித்தனம் என்பது...
UPDATED : செப் 22, 2023 | ADDED : செப் 22, 2023
இளைஞர் ஒருவர் சாக்ரடீஸிடம், புத்திசாலித்தனம் என்றால் என்ன என்று கேட்டார். அதற்கு அவர் அருகிலுள்ள ஊருக்கு நடந்து செல்ல எவ்வளவு நேரமாகும் என தெரிந்து கொண்டு வா எனச் சொன்னார். அவனோ அங்கு இருந்த பெரியவரிடம் எவ்வளவு நேரமாகும் எனக் கேட்டதற்கு பதிலேதும் சொல்லவில்லை. மீண்டும் அது பற்றி பெரியவரிடம் கேட்டும் பதில் இல்லாததால் இளைஞரே அந்த ஊருக்கு நடக்க ஆரம்பித்தார். அப்போது பெரியவர் அரைமணி நேரமாகும் என சத்தமாக சொன்னார். இப்போது மட்டும் எப்படி உங்களால் பதில் சொல்ல முடிந்தது எனக் கேட்டார் இளைஞர். அதற்கு நீ நடக்கும் வேகத்தை வைத்து தான் நேரத்தை கணக்கிட முடியும் என்றார். அங்கிருந்த சாக்ரடீஸ் ''அனுபவத்தின் மூலம் சரியாக செய்வதே புத்திசாலித்தனம்'' என்றார்.